நில மோசடி வழக்கு: பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் கைது

நில மோசடி வழக்கில், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஆசிப் அக்தர் ஹாஷ்மி. இவர் எவாகியு சொத்து அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் அங்கு குஜராத்தில் ரூ.13.5 கோடி மதிப்பிலான 13 கனல் பிரதம நகர்ப்புற நிலத்தை அபகரித்து மோசடி செய்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன்பேரில் அவரை பாகிஸ்தான் மத்திய புலனாய்வு படையினர் எப்.ஐ.ஏ.யினர் நேற்று கைது செய்தனர். இவர் இது போன்று மத்திய அரசின் 12 நிலங்களை அபகரித்தது, பொது நிதியை சுருட்டியது தொடர்பான வழக்குகளில தொடர்பு உடையவர் என தகவல்கள் கூறுகின்றன.

தேசிய பொறுப்புடைமை முகமையால் (ஊழல் தடுப்பு அமைப்பு) 16 வழக்குகளில் விசாரிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com