பாலஸ்தீன பிரதமர் ராஜினாமா

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக முகமது ஷ்டய்யே கூறியுள்ளார்.
பாலஸ்தீன பிரதமர் ராஜினாமா
Published on

காசா,

பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம், தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பாலஸ்தீன நிர்வாகத்தில் புதிய திருப்பமாக, பாலஸ்தீன பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக முகமது ஷ்டய்யே அறிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தில் தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு புதிய அரசு பொறுப்பேற்க பிரதமர் முகமது ஷ்டய்யே விருப்பம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் சமர்ப்பித்துள்ளார்.

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், காசாவில் போர் முடிவுற்ற பின், அதற்குப் பிந்தைய சூழலில் பாலஸ்தீனியத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com