

அசுன்சியோன்,
தென் அமெரிக்காவின் பராகுவே நாட்டின் முன்னணி வங்கியான 'யுயேனோ வங்கி' திடீரென திவாலாகி முடங்கியதை அடுத்து, அங்கு பெரும் அரசியல் கொந்தளிப்பு வெடித்தது. இந்த வங்கி ஊழலில் பல கோடி ரூபாய் பொதுப்பணத்தைத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாகப் முதலீடு செய்ததாக அதிபர் சாண்டியாகோ பென்யா மீது நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, நாடாளுமன்ற செனட் சபையில் நடைபெற்ற விசாரணையில், 44 செனட்டர்களின் ஒருமனதான ஆதர வோடு அதிபர் சாண்டியாகோ பென்யா அதிரடியாகப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அவர் மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, அவரை வீட்டுக் காவலில் அடைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். புதிய அதிபராகப் பெட்ரோ அலியானா பொறுப்பேற்றுள்ளார்.