‘ஆணாதிக்க கலாசாரம் வேதனையளிக்கிறது; பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்’ - பெரு நாட்டில் போப் லியோ பேச்சு

போப் லியோவை வரவேற்பதற்காக தலைநகர் லிமாவில் சுமார் 40 ஆயிரம் பேர் கூடினர்.
‘ஆணாதிக்க கலாசாரம் வேதனையளிக்கிறது; பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்’ - பெரு நாட்டில் போப் லியோ பேச்சு
Published on: 

லிமா,

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவும், வாடிகன் நகரத்தின் தலைவருமான போப் லியோ, தென் அமெரிக்க நாடுகளுக்கு 12 நாள்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

போப் லியோ

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் பிறந்தவர் போப் லியோ(வயது 71). இவரது இயற்பெயர் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் ஆகும். இவர் கடந்த 2025-ம் ஆண்டு மே 18-ந்தேதி போப் ஆண்டவராக பதவியேற்றார். இதன் மூலம் போப் ஆண்டவராக பதவியேற்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

பெரு

முன்னதாக போப் லியோ பெரு நாட்டில் சுமார் 20 ஆண்டுகள் மறைப்பணியாளராகவும், பாதிரியாராகவும் பணியாற்றியுள்ளார். ‘ஒரு மேய்ப்பராக இருப்பது எப்படி என்பதை இந்த இடமே எனக்குக் கற்றுக் கொடுத்தது’ என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 6-ந்தேதி உருகுவே நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போப் லியோ, அங்கிருந்து 8-ந்தேதி ஆர்ஜென்டினா நாட்டுக்கு சென்றார். அந்நாட்டின் தலைநகர் புயனோஸ் அயரஸ் நகரில் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினார். அர்ஜெண்டினா பயணத்தை முடித்துக் கொண்டு, கடந்த 11-ந்தேதி பெரு நாட்டிற்கு போப் லியோ சென்றார்.

வரவேற்பு

நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரு நாட்டிற்கு வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக போப் லியோ தெரிவித்தார். அந்நாட்டின் தலைநகரான லிமாவில் உள்ள பிளாசா மேயர் பகுதியில் போப் லியோவை வரவேற்பதற்காக சுமார் 40 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். அவர்கள் போப் லியோவை வரவேற்கும் வகையில் பெருவின் தேசிய ஒற்றுமையைக் கொண்டாடும் புகழ்பெற்ற ‘கான்டிகோ பெரு’ என்ற பாடலைப் பாடினர். அவர்களுடன் சேர்ந்து போப் லியோவும் உற்சாகமாக பாடினார்.

X