எல்லையில் அமைதி இருநாட்டு உறவுக்கு முக்கியம்; ஜி ஜின்பிங்கிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
பீஜிங்,
ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி நேற்று முன் தினம் இரவு சீனா சென்றார். சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். பின்னர், இரு நாட்டு தலைவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், எல்லையில் அமைதி இருநாட்டு உறவுக்கு முக்கிய என்று ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், எல்லையில் நிலவும் சூழ்நிலை இருநாட்டு உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆரம்பம் முதலே கூறி வருகிறோம். எல்லையில் அமைதி நிலவுவது இருநாட்டு உறவுக்கு முக்கியம். அது இருநாட்டு உறவுக்கான காப்பீடு போன்றது. இந்த தகவலை சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி நேரடியாக தெரிவித்தார்
இவ்வாறு அவர் கூறினார்.






