வடகொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை: டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு - ஜப்பான் பரிந்துரை

வடகொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக, டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்க ஜப்பான் பரிந்துரை செய்துள்ளது.
வடகொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை: டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு - ஜப்பான் பரிந்துரை
Published on

வாஷிங்டன்,

அணு ஆயுத சோதனைகள் மூலம் ஜப்பான் உள்பட சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது வடகொரியா. இதற்கு தீர்வுகாணும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணிந்தது.

இந்த நிலையில் வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக ஜனாதிபதி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என ஜப்பானுக்கு அமெரிக்கா கோரிக்கை வைத்தது.

அதனை ஏற்று, டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பரிந்துரைத்துள்ளார். அத்துடன் அவர் பரிந்துரை கடிதத்தின் நகலை வெள்ளை மாளிகைக்கு அனுப்பிவைத்தார். வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட டிரம்ப், இந்த தகவலை தெரியப்படுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com