ஒமைக்ரான் பாதித்த மக்கள் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற தடை

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பாதித்த மக்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
ஒமைக்ரான் பாதித்த மக்கள் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற தடை
Published on

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பாதிப்பு 38க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால், தென் ஆப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு பல நாட்டு அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்த நிலையில், ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள தென் ஆப்பிரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயணத்திற்கான சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை தென் ஆப்பிரிக்க அரசு பின்பற்றுவதுடன் அதனை அமல்படுத்தி வருகிறது.

ஒமைக்ரான் பாதித்த மக்கள் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. பிற நாடுகள் தங்களுடைய குடிமகன்களை பாதுகாக்க, எடுக்க வேண்டிய அனைத்து தேவையான நடவடிக்கைகளுக்கான உரிமைகளையும் தென் ஆப்பிரிக்கா மதிக்கிறது என்று தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com