மெக்சிகோவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி

மெக்சிகோவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை அவசரகாலத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி
Published on

மெக்சிகோ சிட்டி,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில், தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மெக்சிகோவில் 6 நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் 4 நிறுவனங்களின் தடுப்பூசிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் ஆய்வக முடிவுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளதால், அதனை அவசரகால பயன்பாட்டிற்கு பொதுமக்களுக்கு செலுத்தலாம் என மெக்சிகோ அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே மெக்சிகோவில் பைசர், கோவேக்சின், அஸ்ட்ரா செனகா உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தடுப்பூசி செலுத்த துவங்கியதன் பின்னர், அங்கு கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com