பட்டர் சிக்கன் சாப்பிட ஊரடங்கை மீறிய நபருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்

ஆஸ்திரேலியாவில் பட்டர் சிக்கன் சாப்பிடுவதற்காக ஊரடங்கை மீறி 32 கி.மீ. பயணித்த நபருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பட்டர் சிக்கன் சாப்பிட ஊரடங்கை மீறிய நபருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்
Published on

மெல்போர்ன்,

உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகளுக்கு இதுவரை 1.42 கோடி பேர் ஆளாகி உள்ளனர். இதில், அமெரிக்கா முதல் இடமும், பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.

ஆஸ்திரேலியாவிலும் கொரோனா வைரசின் பாதிப்பு காணப்படுகிறது. இதனால் மக்கள் தேவையின்றி ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மெல்போர்ன் நகரின் மேற்கு பகுதியில் வெர்ரிபீ பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு பட்டர் சிக்கன் சாப்பிட வேண்டும் என ஆசையாக இருந்துள்ளது.

இதற்காக, அவர் எப்பொழுதும் விரும்பி சாப்பிடும் உணவு விடுதிக்கு 32 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். வழியில் அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை செய்துள்ளனர். இதில், ஊரடங்கு விதிகளை அவர் மீறியதது தெரிய வந்தது. இதனால் அவருக்கு போலீசார் ரூ.86 ஆயிரத்து 582 அபராதம் விதித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com