பெரு நாட்டில் ஆபாச திரைப்பட நடிகை மர்ம மரணம்

தைனா பீல்ட்ஸ் மறைவு குறித்து அவரது தோழியும் நடிகையுமான அலெஜான்ட்ரா ஸ்வீட் கடும் வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெரு நாட்டில் ஆபாச திரைப்பட நடிகை மர்ம மரணம்
Published on

பெரு நாட்டைச் சேர்ந்த ஆபாச பட நடிகை தைனா பீல்ட்ஸ் (வயது 24). வயது வந்தோருக்கான ஆபாச படங்களில் நடித்து வந்த இவர் இளம் வயதிலேயே மிகவும் பிரபலமானார்.

ஆபாச திரைப்படத்துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக தைனா பீல்ட்ஸ் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்த துறையில் தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பேசிய அவர், பாலியல் ரீதியாக தான் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில். ட்ரூஜில்லோ நகரில் உள்ள வீட்டில் நடிகை தைனா பீல்ட்ஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த சனிக்கிழமையன்று அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தைனா பீல்ட்ஸ் மறைவு குறித்து அவரது தோழியும் நடிகையுமான அலெஜான்ட்ரா ஸ்வீட் கடும் வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். தைனா பீல்ட்ஸ் பணியாற்றி வந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மில்கி பெருவும் இரங்கல் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com