மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூகீ வீட்டு வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீச்சு

மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூகீ இல்ல வளாகத்திற்குள் பெட்ரோல் வெடிகுண்டு ஒன்று இன்று வீசப்பட்டது. #yangon
மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூகீ வீட்டு வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீச்சு
Published on

யாங்கன்,

மியான்மர் நாட்டில் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகீ. இவர் 21 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளார். அவற்றில் 15 வருடங்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். பின்னர் விடுதலை ஆன சூகீ தீவிர அரசியலில் இறங்கினார்.

கடந்த 2012ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்றது. அதன்பின் நடந்த தேர்தலில் 86 சதவீத தொகுதிகளை கைப்பற்றியது. பின்னர் அவர் பிரதமருக்கு இணையான அதிகாரம் படைத்த மாநில கவுன்சிலர் பதவியை வகித்து வருகிறார். அதனுடன் வெளிவிவகார துறை மந்திரியாகவும் அவர் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், யாங்கன் நகரில் ஏரி பகுதியில் இவருக்கு என்று வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டின் வளாகத்திற்குள் இன்று பெட்ரோல் குண்டு ஒன்று வீசப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலின்பொழுது, சூகீ வீட்டில் இல்லை. இத்தகவலை அவரது செய்தி தொடர்பு அதிகாரியான ஜா டே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

#yangon #petrolbomb #AungSanSuuKyi

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com