பிலிப்பைன்ஸ் விமான விபத்து: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்து உள்ளது.
பிலிப்பைன்ஸ் விமான விபத்து: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
Published on

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் 96-பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானது என அந்நாட்டு ராணுவ ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா கூறினார்.

இந்த விபத்தில் 29 வீராகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா. விமானம் மோதியபோது அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் 6 பேர் பலத்த காயமடைந்தனா. அவாகளில் இருவா உயிரிழந்தனா. சம்பவ இடத்தில் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டு 50க்கும் மேற்பட்ட வீராகள் காயங்களுடன் மீட்கப்பட்டனா. இதில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலா உயிரிழந்தனா.

இந்த வகையில் விமான விபத்தில் பலியானவாகள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 40க்கும் கூடுதலானோர் காயமடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமானம் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், விபத்து தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com