பிலிப்பைன்ஸ்: உயிரியல் பூங்காவில் முதலையுடன் செல்பி - வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்


பிலிப்பைன்ஸ்: உயிரியல் பூங்காவில் முதலையுடன் செல்பி - வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்
x

வலியில் அலறி துடித்த வாலிபர் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு முதலையிடம் இருந்து மீட்கப்பட்டார்.

மணிலா,

பிலிப்பைன்சின் ஜாம்போங்கா சிபுகே மாகாணத்தில் ஒரு உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. அங்கு முதலை, சிங்கம் போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு செல்வது வழக்கம்.

அதன்படி 29 வயது வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் அங்கு சென்றிருந்தார். பின்னர் தடுப்பு வேலியைத் தாண்டி அங்கிருந்த ஒரு முதலையுடன் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அவரது கையை முதலை கவ்விக்கொண்டது.

வலியில் அலறி துடித்த அவர் அரை மணி நேரம் போராடி முதலையிடம் இருந்து மீட்கப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 More update

Next Story