பிலிப்பைன்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மணிலா,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிலிப்பைன்ஸ் தற்போது 20-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிலிப்பைன்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,216 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 20,03,955 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 86 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 533 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 18,754 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், தற்போதுவரை 18 லட்சத்து 29 ஆயிரத்து 473 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 1,40,949 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com