நியூயார்க்கில் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியை காரில் துரத்திய புகைப்படக்காரர்கள்

இங்கிலாந்து ஹாரி-மேகன் தம்பதியை புகைப்படக்காரர்கள் காரில் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்கில் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியை காரில் துரத்திய புகைப்படக்காரர்கள்
Published on

நியூயார்க்,

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அவர்களுடன் மேகனின் தாயும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மூவரும் காரில் திரும்பினர். அப்போது அவர்களை புகைப்படம் எடுப்பதற்காக ஏராளமான புகைப்படக்காரர்கள் கார்களில் துரத்தினர்.

சுமார் 10 கார்களில் புகைப்படக்காரர்கள் துரத்தியதாகவும், 2 மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த துரத்தலால் சாலையில் பல வாகனங்கள் விபத்தில் சிக்க இருந்ததாகவும் இளவரசர் தம்பதியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் பேரழிவை ஏற்படுத்தி இருக்கும் எனவும் அவர் கூறினார். இங்கிலாந்து இளவரசர் தம்பதியை புகைப்படக்காரர்கள் காரில் துரத்திய சம்பவம் நியூயார்க்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com