வான்சாகச பயிற்சியின்போது எப்-16 ரக போர் விமானம் தரையில் விழுந்து விபத்து; விமானி பலி

இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வார்சா,
போலந்து ராணுவத்தில் அதிநவீன எப்-16 ரக போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் ரடோம் நகரில் அடுத்த வாரம் விமான வான்சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் போர் விமானங்கள், சிறியரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என பல பங்கேற்க உள்ளன. இதற்கான பயிற்சி நேற்று நடைபெற்றது. இதில், எப்-16 ரக போர் விமானம் உள்பட பல்வேறு விமானங்கள் பங்கேற்றன.
இந்நிலையில், பயிற்சியின்போது திடீரென எப்-16 போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






