‘பைசா’ கோபுரத்தின் பின்னணி

இத்தாலி ‘பைசா’ நகரத்தின் சாய்ந்த கோபுரம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
‘பைசா’ கோபுரத்தின் பின்னணி
Published on

உண்மையில் இக்கோபுரம், ஒரு தேவாலயத்தின் அருகே அதன் மணிக்கூண்டாக கட்டப்பட்டதாகும்.

இக்கோபுரத்தின் கட்டுமானப் பணி, கி.பி. 1173-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் இதைக் கட்டி முடிக்க சுமார் 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் இருந்தே இக்கோபுரம் வலதுபுறமாகச் சாய ஆரம்பித்துவிட்டது. அந்த சாய்வைத் தடுக்கும் வகையில் திட்டமிட்டுத்தான் கோபுரத்தின் உச்சி 3 அடுக்குகளையும் கட்டினார்கள். ஆனால் அது பலன் கொடுக்கவில்லை. கோபுரம் தொடர்ந்து சாய்ந்துகொண்டுதான் இருந்தது. அது இன்றுவரை தொடர்கிறது. ஒவ்வோர் ஆண்டும் சிறிது சிறிதாகச் சாய்ந்துகொண்டே இருக்கும் இந்தக் கோபுரம், ஒருநாள் முழுமையாகத் தரையில் விழுந்துவிடும் என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com