ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய திட்டம் - பிரம்மாண்ட பைப்லைன் அமைக்கும் கனடா

புதிய திட்டத்தின் மூலம் கனடாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் பொருளாதாரம் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய திட்டம் - பிரம்மாண்ட பைப்லைன் அமைக்கும் கனடா
Published on

ஒட்டாவா,

கனடா நாடு தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு இதுவரை அமெரிக்காவை மட்டுமே முழுமையாக நம்பி இருந்தது. இந்த நிலையை மாற்றி, ஆசிய நாடுக ளுக்குப் புதிய சந்தையை உருவாக்க கனடா பிரதமர் மார்க் கார்னி இப்போது தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.

பிரமாண்ட பைப்லைன்

இதற்காக ஆல்பர்ட்டா மாகாணத்தில் இருந்து பசிபிக் கடற்கரை வரை ஒரு புதிய பிரமாண்ட பைப்லைன் அமைக்கும் திட்டம் தற்போது வேகம் எடுத்துள்ளது. பிரதமர் கார்னியும், ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித்தும் இதற்கான புதிய வழித்தடத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

சுற்றுப்புற சூழலில் கவனம்

இந்த அதிரடி திட்டத்தின் மூலம் கனடாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் பொருளாதாரம் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படாதவாறு வடக்கு கடற்கரை பகுதியில் கப்பல்களுக்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் அரசு உறுதி அளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com