புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானம் : 188 பேரின் நிலை என்ன?

இந்தோனோசியாவில் 188 பயணிகளுடன் சென்ற லயன் ஏர் என்ற விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது
புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானம் : 188 பேரின் நிலை என்ன?
Published on

ஜகார்தா,

இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.33 மணிக்கு 188 பயணிகளுடன் சென்ற விமானம், புறப்பட்ட 13-வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் கடலில் மிதப்பதாக தகவல் வெளியாகி இருப்பதாகவும், அந்த இடத்திற்கு இரண்டு கப்பல்கள், ஒரு சரக்கு கப்பல், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றில் மீட்புக்குழுவினர் விரைந்து உள்ளதாக இந்தோனேசியா ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

விமானத்தில் பயணம் செய்த 188 பேரின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதனால், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com