

பொலிவியாவின் எல் ஆஸ்டோ நகரில் ராணுவ சரக்கு விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. கரன்சி நோட்டுகளை எடுத்து சென்ற இந்த விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானம் சாலையில் கீழே விழுந்து நொறுங்கியதில் கார்களும் சேதம் அடைந்தன.
இந்த கோர விபத்தில் 15 பேர் பலியானதோடு, 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஓடுபாதையில் தறையிறங்கும் போது தடுமாறிய விமானம் அருகில் உள்ள சாலையில் விழுந்துள்ளது. விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்து கட்டுக்கட்டாக பணம் விழுந்ததால், மக்கள் அவற்றை போட்டி போட்டுக்கொண்டு அள்ளி சென்றனர்.