

பொகோட்டா,
அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள நார்டே டி சண்டாண்டர் என்ற பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த விமானத்தில் 13 பயணிகள், 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 15 பேர் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொலம்பியா மாகாணத்தின் கீழ்சபை எம்.பி. குவிண்டெரோ என்பவரும் உயிரிழந்துள்ளார். மேலும், எதிர்வரும் தேர்தலில் போட்டியிட இருந்த சால்சிடோ என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.