அமெரிக்காவில் மரக்கிளை மீது இறக்கை உரசியதால் விழுந்து நொறுங்கிய விமானம்


அமெரிக்காவில் மரக்கிளை மீது இறக்கை உரசியதால் விழுந்து நொறுங்கிய விமானம்
x

representative image (ANI)

விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் விழுந்து நொறுங்கியது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டென்னசி மாகாணம் துல்லாஹோமா விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் விமானி உள்பட 20 பேர் பயணித்தனர். பீச் கிராப்ட் அருங்காட்சியகம் அருகே சென்றபோது அங்கிருந்த ஒரு மரக்கிளை மீது விமானத்தின் இறக்கை உரசியது. இதில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.

1 More update

Next Story