தரையிறங்கும் போது விபத்தில் சிக்கிய விமானம்: அமெரிக்க ஏர்போர்ட்டில் பரபரப்பு

அமெரிக்காவில் சிறிய ரக விமானம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தரையிறங்கும் போது விபத்தில் சிக்கிய விமானம்: அமெரிக்க ஏர்போர்ட்டில் பரபரப்பு
Published on

வாஷிங்டன்,

வாஷிங்டனில் உள்ள புல்மேன் விமான நிலையத்தில் இருந்து 4 பேருடன் புறப்பட்ட சிறிய ரக விமானம், மொண்டானாவின் காலிஸ்பெல் சிட்டி விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியது. உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2 மணிக்கு தரையிறங்கும் போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி தீப்பிடித்தது.

தொடர்ந்து, விமான நிறுத்துமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் விமானம் மீது மோதியது. உடனடியாக சிறிய ரக விமானத்தில் பயணித்த 4 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

விமான நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்த விமானங்களில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விமான விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலம் போல காட்சியளித்தது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com