நெதர்லாந்து இளவரசிகளை கொல்ல சதி: வாலிபர் கைது

இளவரசிகளை கொலை செய்யும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெதர்லாந்து இளவரசிகளை கொல்ல சதி: வாலிபர் கைது
Published on

ஆம்ஸ்டர்டாம்,

நெதர்லாந்து நாட்டு இளவரசி கத்தரீனா-அமாலியா (22), அரச குடும்பத்தின் மூத்த மகள் மற்றும் அரியணையின் அடுத்த வாரிசு ஆவார். இரண்டாவது மகளான இளவரசி அலெக்ஸியா (20), கலை மற்றும் பேஷன் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்.

கடந்த 2022-ம் ஆண்டு அமாலியாவிற்கு ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து வந்த கடத்தல் மிரட்டல் காரணமாக, அவர் தனது கல்லூரி விடுதி வாழ்க்கையைத் துறந்து அரண்மனைக்குத் திரும்ப வேண்டியிருந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் ஒரு வருடம் ரகசியமாக ஸ்பெயினில் தங்கிப் படித்தார் வந்தார்.

இந்த நிலையில் இளவரசிகளை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக 33 வயது வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர். ஹேக் நகரில் கைது செய்யப்பட்ட அந்த வாலிபரிடம் இருந்து அமாலியா, அலெக்சியா, ரத்த குளியல் ஆகிய வார்த்தைகள் எழுதப்பட்ட கையெழுத்து குறிப்பு ஒன்று கைப்பற்றப்பட்டது.

மேலும் அந்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இரு கோடரிகளில் அலெக்சியா, மொசாத் மற்றும் சீக் ஹெய்ல் எனப் பொறிக்கப்பட்டிருந்தது. இதில் சீக்ஹெய்ல் என்பது ஹிட்லர் படையான நாஜிக்களால் இரண்டாம் உலகப் போரின் போது, வாழ்த்து முழக்கம் என்பதாக இருந்தது.

இளவரசிகளை கொலை செய்யும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் நாளை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com