டிரம்ப்பை கொல்ல திட்டம்; வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் இளைஞர் கைது

24 மணி நேரமும் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
டிரம்ப்பை கொல்ல திட்டம்; வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் இளைஞர் கைது
Published on: 

வாஷிங்டன்,

டிரம்ப்பை கொல்லும் திட்டத்துடன் வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இவர் வாஷிங்டனில் உள்ள ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையில் பணியாற்றி வருகிறார்.

இதனிடையே, வெள்ளை மாளிகையில் பாதுகாப்புப்பணியில் தினமும் 24 மணி நேரமும் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

டிரம்ப்பை கொல்ல திட்டம்

இந்நிலையில், வெள்ளை மாளிகை அருகே நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கார் நின்றுகொண்டிருந்தது. இதனால் விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் காரில் இருந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளைஞர் வெனிசுலா நாட்டை சேர்ந்த ரோனி யொடிக்ஸ் கிறிஸ்னோஸ் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும், அவர் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

அந்த இளைஞரின் காரில் சோதனை நடத்திய பாதுகாப்புப்படையினர் அதில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த இளைஞரை கைது செய்த பாதுகாப்புப்படையினர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

X