காஷ்மீருக்கு ஆதரவாக முசாபர்பாத்தில் பிரம்மாண்ட கூட்டம் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீருக்கு ஆதரவாக முசாபர்பாத்தில் பிரம்மாண்ட கூட்டம் நடத்தப்போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு ஆதரவாக முசாபர்பாத்தில் பிரம்மாண்ட கூட்டம் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
Published on

இஸ்லாமாபாத்,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு, பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவைப்பெற முயன்ற அந்நாடு, தோல்வி அடைந்தது. இதனால், சமீபத்தில், காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற தோற்றத்தை காட்ட, காஷ்மீர் ஹவர் கடைபிடிக்கப்பட்டது. ஆனால், அந்நாட்டு மக்களே போதிய ஆதரவு அளிக்காமல் காஷ்மீர் ஹவர் பிரசாரம் தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி முசாபர்பாத்தில் பிரம்மாண்ட கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். காஷ்மீரில் இந்திய படைகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளன. எனவே, எந்த தயக்கமும் இன்றி காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை காட்டவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபர்பாத்தில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏராளமான அடக்குமுறைகளும் மனித உரிமை மீறல்களும் பாகிஸ்தான் ராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுவதாக அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மேற்கூறிய செயல் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com