

ஜெருசலேம்,
2 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். அவர் தற்போது, இஸ்ரேலின் பென் குரின் சர்வதேச விமான நிலையம் சென்றார்.
பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு செல்வது இது 2வது முறையாகும். இதற்குமுன் 2017ம் ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றார். அதன்பின்னர், தற்போது 2வது முறையாக இன்று இஸ்ரேல் சென்றுள்ளார்.
பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவரது மனைவி சாராவும் உடன் இருந்தார்.
இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். இந்த பயணத்தின்போது இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சொங்கை சந்திக்க உள்ளார்.
அதேவேளை, இஸ்ரேல் பயணத்தின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும், பிரதமர் மோடியின் இந்த பயணத்தின்போது இஸ்ரேலிடமிருந்து அதிநவீன ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.