இங்கிலாந்து மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு

இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு இந்திய பிரதமர் மோடி மரக்கன்று ஒன்றை வழங்கினார்.
இங்கிலாந்து மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு
Published on

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து பேசினார்.அப்போது இரு நாடுகளுக்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து சாண்ட்ரிங்ஹாம் இல்லத்தில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

மோடியை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் வரவேற்றார். அப்போது, மரக்கன்று ஒன்றை சார்லசுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.சுற்றுச்சூழலை ஊக்குவிக்க பிரதமர் தொடங்கி வைத்த "Ek Ped Maa Ke Naam" திட்டத்தில் மன்னர் ஈர்க்கப்பட்டார் என அரச குடும்பம் தெரிவித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது தொடர்பாக இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதற்கிடையே தனது இரண்டு நாள் இங்கிலாந்து சுற்ற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, மாலத்தீவு புறப்பட்டு சென்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com