பிரதமர் மோடி அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்தார் -அமெரிக்கர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி

பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்புகிறார். அமெரிக்கர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்.
பிரதமர் மோடி அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்தார் -அமெரிக்கர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி
Published on

நியூயார்க்

பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்புகிறார். அமெரிக்க மக்களின் "தனிசிறப்பான வரவேற்பு, அரவணைப்பு மற்றும் விருந்தோம்பல்" ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்ததோடு, தங்கியிருந்த காலத்தில் அவர் கலந்து கொண்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகளும் இந்தியாவுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று கூறி உள்ளார்.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், பிரதமர் தனது சிறப்பு விமானத்தில் ஏறும் இரண்டு புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார்.

அதில் "பிரதமர் நரேந்திரமோடி சிறப்பம்சங்கள் நிறைந்த தனது பயணத்தை முடிக்கிறார்," என்று அவர் கூறி உள்ளார்.

சிறப்பு விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு, பிரதமர் தனது ஒரு வார பயணத்தையும் அமெரிக்காவில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளையும் விவரித்தார்.

சர்வதேச தலைவர்களுடனான தனது சிறந்த இருதரப்பு சந்திப்புகள் மற்றும் அமெரிக்க தொழில்துறை தலைவர்களுடனான சதிப்பையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியாவுக்கு அதிக முதலீட்டை ஈர்ப்பது மற்றும் இந்தியாவின் சீர்திருத்தப் பாதையுடன் உலகை அறிவது ஆகியவை நோக்கங்களில் ஒன்றாகும். ஹூஸ்டனில் உள்ள எரிசக்தி துறை தலைமை நிர்வாக அதிகாரிகளுடனும், நியூயார்க்கில் உள்ள தொழில்துறையின் அமெரிக்க தலைவர்களுடனும் எனது தொடர்புகள் வெற்றிகரமாக இருந்தன. இந்தியாவில் வாய்ப்புகளை ஆராய உலகம் ஆர்வமாக உள்ளது என கூறினார்.

ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி! இந்திய வம்சாவளியினர் நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு மோடி நன்றி தெரிவித்தார். சிறப்பான #HowdyModi திட்டத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். மேலும் அமெரிக்கா, இந்தியாவுடனான உறவையும் நமது திறமையான புலம்பெயர்ந்தோரின் பங்கையும் மதிக்கிறது என ட்விட் செய்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com