இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்து மாலத்தீவு புறப்பட்டார் பிரதமர் மோடி


இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்து மாலத்தீவு புறப்பட்டார் பிரதமர் மோடி
x

மாலத்தீவு நாட்டின் 60வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

டெல்லி,

பிரதமர் மோடி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து, மாலத்தீவு சென்றுள்ளார். முதல் நாடாக கடந்த 23ம் தேதி இங்கிலாந்து சென்றார். அவர் இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எனப்படும் முக்கிய ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து மன்னர் சார்லசை பிரதமர் மோடி சந்தித்தார்.

இந்நிலையில், 2 நாட்கள் இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இன்று மாலத்தீவு புறப்பட்டு சென்றார். மாலத்தீவு செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் முகமது முய்சுவை சந்திக்கிறார். மேலும், அவர் மாலத்தீவு நாட்டின் 60வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதனை தொடர்ந்து மாலத்தீவு பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி நாளை மாலை டெல்லி திரும்புகிறார்.

1 More update

Next Story