கனடா சென்றார் பிரதமர் மோடி - ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார்...!

ஜி7 உச்சி மாநாடு நேற்று முன் தினம் தொடங்கியது.
கனடா சென்றார் பிரதமர் மோடி - ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார்...!
Published on

ஒட்டாவா,

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த மாநாடு இன்று நிறைவடைகிறது.

இதனிடையே, ஜி7 உச்சி மாநாடில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் மோடிக்கு கனடா பிரதமர் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.

இந்நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கனடா சென்றுள்ளார். கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கால்கரி நகருக்கு சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்தில் கனடா அதிகாரிகள் வரவேற்றனர். பிரதமர் மோடி கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளும் நிலையில் இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட பல உலகத்தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com