

வாஷிங்டன்,
குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 குவாட் கூட்டமைப்பு நாடுகள், இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டன. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குவாட் உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான் நிலவரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குவாட் கூட்டமைப்பை சாதகமான வழியில் பயன்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் ஆலோசனைக்குப் பிறகு உச்சி மாநாடு நிறைவு பெற்றது.
இதனை தொடர்ந்து நியூயார்க்கில் நாளை நடைபெற உள்ள ஐ.நா. பொது சபையின் 76 வது அமர்வில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதில் கலந்து கொள்வதற்காக தற்போது பிரதமர் மோடி வாஷிங்டனில் இருந்து விமானம் மூலமாக நியூயார்க் புறப்பட்டுச் சென்றுள்ளார்.