

மணிலா,
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் அடையாளக் குறியீடாக தரையில் வைக்கப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை எடுத்து பிரதமர் மோடி மரியாதையாக பாக்கெட்டில் எடுத்து வைத்துக்கொண்டார்.
ஆசியான் - இந்தியா அமைப்பு உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு இன்று பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று பிலிப்பைன்ஸ் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று காலை 23-வது ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு தொடங்கியது. இதில் பிரதமர் மோடி மற்றும் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர் மலேசியா உளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தமாநாடு முடிந்ததும், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகித்த குவாட் மாநாடு நடந்தது.
இதில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சனா தகைச்சி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பங்கேற்றனர். மாநாடு துவங்கியதும் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த மேடையில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் நிற்க வேண்டிய இடத்தை குறிக்க காகிதத்தால் ஆன தேசியக் கொடி கீழே வைக்கப்பட்டு இருந்தது.
முதலில் வந்த சனா தகைச்சி, ஜப்பான் கொடி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் நின்றார். அடுத்து பிரதமர் மோடி மேடைக்கு வந்தார். கீழே இருந்த காகிதத்தால் ஆன தேசியக்கொடியை வேறு யாரும் மிதிக்காமல் இருப்பதற்காக அதனை எடுத்து தனது சட்டென சட்பைப்பையில் வைத்துக்கொண்டார். அவருக்கு பின்னால் வந்த டிரம்ப் இதை பார்த்து கொடியை காப்பாற்றிவிட்டார் என மோடியை பாராட்டினார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னர் 2023ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் பிரிக்ஸ் மாநாடு நடந்தது. அதன் ஒரு பகுதியாக வர்த்தக நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, மேடையில் தலைவர்கள் நிற்க வேண்டிய இடத்தை குறிக்க இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்காவின் கொடிகள் வைக்கப்பட்டன. மேடை ஏறிய பிரதமர் மோடி, இந்திய தேசியக்கொடியை தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.