பிரான்சில் பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் சந்திப்பு: வெள்ளை மாளிகை தகவல்

ஜி7 உச்சிமாநாட்டில் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.
பிரான்சில் பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் சந்திப்பு: வெள்ளை மாளிகை தகவல்
Published on

வாஷிங்டன்,

பிரான்ஸ் நாட்டின் எவியன் லெஸ் பெய்ன்ஸ்(Évian-les-Bains) நகரில், இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சிமாநாடு வரும் ஜூன் 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெறுகிறது. பிரான்ஸ் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், சர்வதேச பொருளாதார மீட்சி, உலகளாவிய ஒற்றுமை மற்றும் செயற்கை நுண்ணறிவின்(AI) பொறுப்பான பயன்பாடு ஆகியவை முக்கிய கருப்பொருள்களாக விவாதிக்கப்படுகின்றன.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். அவர் உலகளாவிய தெற்கு (Global South) நாடுகளின் எதிர்பார்ப்புகளை முன்னிலைப்படுத்துவதோடு, அமெரிக்க அதிபர் உள்ளிட்ட பிற உலகத் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார்.

இந்நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் செல்லும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கு பிரதமர் மோடியை சந்திப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஜி7 உச்சிமாநாட்டின்போது, ​​ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் சிக்கல்களை அகற்றும் திட்டங்கள் குறித்து அதிபர் டிரம்ப் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com