மேற்காசிய சூழல், எரிபொருள் இறக்குமதி தொடர்பாக பிரதமர் மோடி, டிரம்ப் இன்று முக்கிய ஆலோசனை

மேற்காசிய சூழல், எரிபொருள் இறக்குமதி தொடர்பாக பிரதமர் மோடி, டிரம்ப் இன்று முக்கிய ஆலோசனை

மேற்காசிய சூழல், எரிபொருள் இறக்குமதி தொடர்பாக பிரதமர் மோடி, டிரம்ப் இன்று முக்கிய ஆலோசனை
Published on

இவியான்

பிரான்ஸ் நாட்டில் இவியான் நகரில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இவியான் நகருக்கு சென்று சேர்ந்துள்ளார். இதேபோன்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சென்றுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் சென்றுள்ளார். இந்த நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடியை 16 மாதங்களுக்கு பின்னர் நேரில் பார்த்ததும், அமர்ந்திருந்த டிரம்ப் எழுந்து சென்று அவருடன் கைகுலுக்கினார். அவருடன் சிறிது நேரம் உரையாடினார். கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளிகையில் இருவரும் சந்தித்து கொண்டனர்.

அவர்கள் இருவரும் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று இருதரப்பு ஆலோசனைக்கான சந்திப்பு ஒன்றை நடத்துகின்றனர். பிரான்ஸ் வருகை பற்றி பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டின் இவியான் நகருக்கு வந்துள்ளேன்.

உலக தலைவர்களை சந்தித்து, உலகளாவிய விவகாரங்களை பற்றிய பார்வைகளை பரிமாறி கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டார். நீடித்த மற்றும் வளம் நிறைந்த பூமிக்காக கூட்டு முயற்சிகளை நவீனப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த சூழலில், ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, மேற்காசிய சூழல், ஹார்மூஸ் நீரிணை, அமெரிக்காவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி உள்ளிட்டவை பற்றி பிரதமர் மோடியும், டிரம்ப்பும் இன்று ஆலோசனை மேற்கொள்வார்கள் என தகவல் தெரிவிக்கின்றது. எரிசக்தி துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் நீண்டகால உறவில் இருந்து வருகின்றன. வர்த்தக ஒப்பந்தம் அதன் இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் சில வாரங்களில் அதற்கான பணிகள் நிறைவடையும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று, ஜி7 உச்சி மாநாட்டு தலைவர்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்க ராணுவ தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த கப்பல் ஊழியர்கள் 3 பேர் உள்பட பலர் பலியான சம்பவம் பற்றி குறிப்பிட்டு பேசினார். அப்போது அந்த கூட்டத்தில் டிரம்ப்பும் அமர்ந்து இருந்தது கவனிக்கத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com