

மணிலா,
15-வது ஆசியான் மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நாளை (13-ந்தேதி) நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார். இந்த மாநாட்டில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன பிரதமர் லீ கெ கியாங், ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், வியட்நாம் பிரதமர் கியூயன் ஷூயாங் புக், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூட்ரேட் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் அதில் கலந்து கொண்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். டொனால்டு டிரம்ப், மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்டே, சீன பிரதமர் லீ கெகியாங்,ரஷ்ய பிரதமர் ட்மிட்ரி மெட்வேதேவ், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்டோரை சந்தித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடி இடையேயான இருதரப்பு சந்திப்பு நாளை பிற்பகல் 1 மணியளவில் நடைபெறுகிறது.