சர்வதேச யோகா தினம்; யோகா பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை பிரதமர்

சர்வதேச யோகா தினத்தில் இலங்கை நாட்டு பிரதமர் மகிந்தா ராஜபக்சே யோகா பயிற்சியில் இன்று ஈடுபட்டார்.
சர்வதேச யோகா தினம்; யோகா பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை பிரதமர்
Published on

கொழும்பு,

உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஆண்டுதோறும் ஜூன் 21ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, முதல் சர்வதேச யோகா தினம், கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 21ந்தேதி கொண்டாடப்பட்டது.

7வது சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பொது இடங்களில் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் யோகா பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

எனினும், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் உள்ளன. கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன். இதனால், 7வது சர்வதேச யோகா தினம் எளிமையாக கொண்டாடப்படுகிறது.

இலங்கை நாட்டிலும் 7வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பிரதமர் மகிந்தா ராஜபக்சே யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com