போலந்து நாட்டில் இன்று ஒரே நாளில் புதிதாக 25,052 பேருக்கு கொரோனா பாதிப்பு

போலந்து நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,052 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வார்சா,

இங்கிலாந்தில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின.

சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது உலகம் முழுவதும் 12.14 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தாக்கம் காரணமாக 26.85 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் போலந்து நாட்டில் இன்று ஒரே நாளில் புதிதாக 25,052 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி போலந்து நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 25,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை தற்போது 19,56,974 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 453 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 032 ஆக உயர்ந்துள்ளது.

போலந்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 15,93,165 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,15,777 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com