குடும்ப பிரச்சினையின் போது துப்பாக்கிச்சூடு; 11 பேர் பலி

குடும்ப பிரச்சினையின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.
குடும்ப பிரச்சினையின் போது துப்பாக்கிச்சூடு; 11 பேர் பலி
Published on

கடின்ஜி,

தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு மொண்டெனேகுரோ. அந்நாட்டின் மெடொவினா நகரில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

குடும்ப பிரச்சினை காரணமாக 34 வயதான நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தினார். குடும்ப உறுப்பினர்கள், தெருவில் நடந்து சென்றவர்கள் என கண்ணில் பட்டவர்கள் அனைவரையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். ஆனால், அந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், போலீஸ்காரர் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? தாக்குதலுக்கான காரணங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com