

ஜெருசலேம்,
இஸ்ரேலில் வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் வாக்குச் சீட்டு முறையில் நடைபெறுகிறது.
இதற்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்ட வாக்குசாவடிகளில் பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். 73 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானர்கள் ஆவார்கள். வாக்குச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் தேர்தல் கண்காணிப்பாளர்களாக பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு விறு விறுப்புடன் நடைபெற்று வருகிறது.
120இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற 61 இடங்களை கைப்பற்ற வேண்டும். தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன் கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறடு.
கடந்த 2023-ம் ஆண்டு நடந்த ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலில் நடக்கும் நாடாளுமன்ற டேர்டலில் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கருத்துக்கணிப்புகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரும் பெரும்பான்மை பலத்துடன் கூட்டணியை அமைக்க தறினால் அடுத்த சில மாதங்களில் மீண்டும் தேர்தல் நடைபெறும் வரை பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசே காபந்து அரசாக நீடிக்கும்.
ஈரான் உடனான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகளின் மோதல் காரணமாக எரிபொருள் விநியோகம் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா, அதன் மூலம் அமைதி நிலை திரும்புமா என்ற எதிர்பார்ப்பில் உலக நாடுகள் உள்ளன.