

வாஷிங்டன்,
அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி குவாமர் பாஜ்வாவை இன்று தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார்.
இதுபற்றி பாம்பியோவின் வெளியுறவு துறையின் செய்தி தொடர்பு அதிகாரியான ஹெதர் நாவெர்ட் கூறும்பொழுது, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுத்துவதற்கான வழிகளை பற்றி இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான தேவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. தெற்காசியாவில் உள்ள அனைத்து தீவிரவாத மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக வேற்றுமை இன்றி நடவடிக்கை எடுக்கும்படி பாஜ்வாவிடம் பாம்பியோ கேட்டு கொண்டார் என தெரிவித்துள்ளார்.