கிறிஸ்துமஸ் வாடிகனில் அகதிகளுக்காக பிரார்த்தனை செய்த போப்பாண்டவர்

ஏசு பிறந்த தினத்தை முன்னிட்டு வாடிகனில் போப்பாண்டவர் அருள் உரை நிகழ்த்தினார். அப்போது அகதிகளுக்காக அவர் பிரார்த்தனை செய்தார்.
கிறிஸ்துமஸ் வாடிகனில் அகதிகளுக்காக பிரார்த்தனை செய்த போப்பாண்டவர்
Published on

வாடிகன்,

ஏசு கிறிஸ்து பிறந்த நாளா டிசம்பர் 25ந்தேதியை முன்னிட்டு, 24-ந்தேதி நள்ளிரவு நாடு முழுவதும் தேவாலயங்களில் பிரார்த்தனை நடைபெற்றது.

அதை முன்னிட்டு, கத்தோலிக்க தலைநகரான வாட்டிகன் நகரில் நடைபெற்ற நள்ளிரவு பிரார்த்தனையில் போர் ஆண்டவர் பிரான்சிஸ் அருளுரை ஆற்றினார். இந்த கூட்டத்திற்கு பல்லாயிக்கணக்கானோர் திரண்டனர்.

அப்போது போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசியதாவது,:-

தங்களுக்கென இடமில்லாத ஒரு உலகில்தான் அன்னை மேரி ஏசு பாலகனோடு வந்தார்.நிகழ்காலங்களிலும் இதற்கான உதாரணங்களாக ரோஹிங்கா அகதிகளையும் சுட்டிக் காட்டினார்.

இதற்காக, மேரி மற்றும் யோசேப்புடன் ஒப்பிடுகையில், நாசரேத்திலிருந்து பெத்லேகேமுக்குச் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் தங்க இடம் கிடைக்கவில்லை

லட்சக்கணக்கான குடும்பங்கள் கருணையே இல்லாமல் நிலங்களில் இருந்து விரட்டப்படுவதை காண்கிறோம். பல குடியேறியவர்கள், "குற்றமற்ற இரத்தம் சிந்தப்படுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை" என்ற தலைவர்களிடம் இருந்து தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது தங்கள் அன்புக்குரியவர்களை விட்டு விட்டு பலர் பலவந்தமாக வெளியே விரட்டப்படுவதாக தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குமரி மாவட்டம் தூத்தூர் பகுதி மக்கள் காணாமல் போன மீனவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். மீனவர்கள் கரை திரும்பாததால், வழக்கமான உற்சாகம் இன்றி சோகத்துடன் நள்ளிரவு பிரார்த்தனையில் ஏசு கிறிஸ்துவை வழிபட்டனர்.

பிரார்த்தனையை முடித்த 8 மீனவ கிராம மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் மெழுகுவர்த்தியை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். அந்தந்த ஊர்களில் உயிரிழந்தவர்கள் குறித்து வைக்கப்பட்ட பேனர்கள் முன் நின்று அனைவரும் அஞ்சலி செலுத்தினர். பல கிராமங்களில் மக்கள் கிறிஸ்துமஸை கொண்டாடாமல் தவிர்த்துவிட்டனர்.

ஒகி புயலால் காணாமல் போன மீனவர்கள் பலர் கரை திரும்பாததை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com