"அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்" - இரு நாடுகளுக்கும் போப் ஆண்டவர் அறிவுரை

"அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்" என்று போப் ஆண்டவர் வலியுறுத்தியுள்ளார்.
"அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்" - இரு நாடுகளுக்கும் போப் ஆண்டவர் அறிவுரை
Published on

வாட்டிகன் சிட்டி,

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக நீண்டகாலமாக மோதல் இருந்துவருகிறது. இதனால் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா குண்டுவீசி கொன்றது.

இதற்கு பதிலடியாக ஈராக்கில் எர்பில் மற்றும் அல்-ஆசாத் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார். வாடிகனில் பேசிய அவர், மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் சமரசத்தில் ஈடுபட வேண்டும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com