3 கோடி சந்தாதாரர்களுடன் யூ-டியூப்பில் பிரபலம்: 6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி

3 கோடி சந்தாதாரர்களுடன் யூ-டியூப்பில் பிரபலமான 6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி என தெரிய வந்துள்ளது.
3 கோடி சந்தாதாரர்களுடன் யூ-டியூப்பில் பிரபலம்: 6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி
Published on

சியோல்,

தென் கொரியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமியான போரம் 2 யூ-டியூப் சேனல்களை நடத்தி வருகிறாள். அதில், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் குறித்து மதிப்பாய்வு (ரிவ்யூ) செய்து, வெளியிடுவது தான் போரமின் பணி.

மழலைக்குரலில் அவள் கூறும் ரிவ்யூவை கேட்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதன் மூலம் 3 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டு யூ-டியூப்பில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் போரம்.

இந்தநிலையில் போரமின் யூ-டியூப் சேனல் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு அவளது பெற்றோர் தலைநகர் சியோலில் 8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.55 கோடி) 5 மாடிகளை கொண்ட வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்கள்.

இது அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. போரமின் இந்த அசுர வளர்ச்சிக்கும், அபார வருமானத்துக்கும் முக்கிய காரணம் என்பது குறித்து யூ-டியூப் நிபுணர்கள் கூறுகையில், போரமின் யூ-டியூப் சேனல்களுக்கு மொத்தம் 3 கோடியே 10 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதால் அவள் மாதம் 3.1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.21 கோடி) சம்பாதிக்கிறாள் என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com