இமயமலை பிராந்தியத்தில் மீண்டும் பனிப்பாறை பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு: சீன நிபுணர் எச்சரிக்கை

சுமார் 7 ஆயிரம் சிறிய பனிப்பாறைகள் முற்றிலும் மறைந்து விட்டதாக சீன நிபுணர் கூறியுள்ளார்.
இமயமலை பிராந்தியத்தில் மீண்டும் பனிப்பாறை பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு: சீன நிபுணர் எச்சரிக்கை
Published on

பீஜிங்,

நேபாளம்-திபெத் எல்லையில் கடந்த 26-ந்தேதி இமயமலையில் 2 மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மிகப்பெரும் சேதம் விளைந்துள்ளது. இதுபோன்ற பேரழிவுகள் வருங்காலத்திலும் தொடரும் என சீன காலநிலை வல்லுனர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த நாட்டின் தேசிய பருவநிலை மையத்தின் துணை இயக்குனரான காவோ ராங் என்ற அந்த நிபுணர் கூறுகையில், 'கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திபெத் பீடபூமியின் பனிப்பாறை பகுதி 24 சதவீதத்துக்கும் மேல் சுருங்கியுள்ளது. சுமார் 7 ஆயிரம் சிறிய பனிப்பாறைகள் முற்றிலும் மறைந்து விட்டன' என அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் அவர், 'வரும் காலத்தில், திபெத் பீடபூமி முழுவதும் உள்ள பனிப்பாறைகளின் கட்டமைப்பு உறுதித்தன்மை மேலும் குறையும். பனிப்பாறை பேரழிவுகள் அடிக்கடி நிகழ வாய்ப்புள்ளதுடன், அவை அழிவின் தீவிரத்தை அதிகரித்து, தொடர் விளைவுகள் மூலம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்' என்றும் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com