இந்தோனேசியாவில் ரிக்டர் 5.9 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் ரிக்டர் 5.9 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Published on: 

ஜகார்தா,

இந்தோனேசியாவின் சும்பாவா தீவுப் பிராந்தியத்தில் நேற்று அதிகாலை சக் திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளபடி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இது பூமியின் அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் உருவானது.

நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் கடைகள் பயங்கரமாகக் குலுங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்தபடி வீதிகளுக்கும், திறந்த வெளிகளுக்கும் ஓடிச் சென்றனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், இந்தோனேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் முகமை, சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com