பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவு

பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவு
Published on

நியூயார்க்,

பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவானது. நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 5.7 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2,100 பேர் பலியானது நினைவிருக்கலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com