

பொகோட்டா,
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் இன்று(இந்திய நேரப்படி) மாலை 6 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் வெனிசுலா எல்லை வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது.