

காபூல்,
ஆப்கானிஸ்தானின் மேற்கே கோர் மாகாணத்தில் பிரோஷ் கோ நகரில் காவல் அலுவலகத்திற்கு வெளியே இன்று சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர். 90 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை உயர கூடும் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.