ஐஸ்லாந்தில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

ஐஸ்லாந்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிகடர் அளவில் 6.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐஸ்லாந்தில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
Published on

ரெய்க்ஜேன்ஸ்,

ஐஸ்லாந்த் ரெய்க்ஜேன்ஸ் ரிட்ஜ் கடல் பகுதியில் நேற்று இரவு திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 07.39 (இந்திய நேரப்படி) மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 52.85 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 32.05 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com